உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிகாரிகள் முன் தீக்குளிக்க முயற்சி

அதிகாரிகள் முன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகள் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் பெருமாள், 58; இவர், நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், அதிகாரிகள் முன் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் மீட்டு, விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டினேன். பல இடங்களில் கடன் வாங்கி வீடு கட்டிய நிலையில், அதற்கான தொகை இதுவரை அதிகாரிகள் வழங்க நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதால் தற்கொலைக்கு முயன்றேன்' என்றார். இதையடுத்து போலீசார் அறிவுரையின்படி, கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றார். அதிகாரிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ