மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
19-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புனிதா வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மலர், தாஜ்நிஷா, பொருளாளர் சங்கீதா, முன்னாள் மாநில துணை தலைவர் அபராஜிதன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். ரூ. 3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் சத்துணவு ஊழியர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
19-Apr-2025