உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம் குஜராத் பல்கலை இடையே ஒப்பந்தம்

ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம் குஜராத் பல்கலை இடையே ஒப்பந்தம்

வானூர் : ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி ரவி, குஜராத் மாநில வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் உள்ளார். இவர் ஆரோவிலின் செயல்திட்டங்கள் குறித்து அந்த மாநில உயர் அதிகாரிகள், பல்கலை நிர்வாகத்தினர்களிடம் தெரிவித்திருந்தார். இதில் ஆர்வம் செலுத்திய அவர்கள், ஆரோவில் செயல்திட்டங்களை பல்கலைகளில் செயல்படுத்த ஆர்வம் தெரிவித்தனர். இந்நிலையில் அகமதாபாத் மேலாண்மை சங்கம் சார்பில் 'ஆரோவில்லில் நல்ல நடைமுறைகள்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்ச்சிக்கு அகமதாபாத் மேலாண்மை சங்கத்தின் சவன் கோடிவாலா வரவேற்றார். ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி, ஆரோவில் செயல்திட்டங்கள் குறித்தும், ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக வளர்ச்சி குறித்தும், அன்னையின் தொலைநோக்கு பார்வை மற்றும் ஆரோவில் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.ஆரோவில் அறக்கட்டளையின் பணிக்குழு உறுப்பினர் அனுராதா லெக்ராண்ட், ஆரோவில் நகர மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயா ஜோரல், ஸ்ரீ அரவிந்தர் கல்வி ஆராய்ச்சி மைய நிர்வாகி சஞ்சீவ் ரங்கநாதன் ஆகியோர்,'விடியற்காலத்தின் நகரம்' என்ற தலைப்பில் ஆரோவில் சமூகத்தின் தத்துவங்கள், நிர்வாகம், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாசாரம் பரிமாணங்கள் குறித்து விளக்கினர்.இதன் தொடர்ச்சியாக ஆரோவில் நிர்வாகம், குஜராத் மாநில கல்வி வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக அந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட பகுப்பாய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன் கையெழுத்திட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி