உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ டிரைவர் மகள்  சிலம்பத்தில் அசத்தல்

ஆட்டோ டிரைவர் மகள்  சிலம்பத்தில் அசத்தல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆட்டோ டிரைவரின் மகள் சிலம்பத்தில் தேசிய அளவில் சாதனை படைத்து, பாராட்டுகளை பெற்று வருகிறார். விழுப்புரம், காகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். ஆட்டோ ஓட்டுநர். இவர் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் தமிழ்செல்வி. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர் சிலம்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் விழுப்புரம் டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசியிடம், பயிற்சி பெற்று மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் வென்றுள்ளார்.மேலும் இவர் பள்ளி கல்வித்துறையின் சிலம்பம் போட்டடியில் முதல் பரிசும், தேசிய போட்டியிலும் பங்கேற்றுள்ளார். அதே போல் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசும், தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். மேலும், நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுழற்சி சாதனை படைத்துள்ளார். இது குறித்து தமிழ்செல்வி கூறுகையில், ' சிலம்பம் கற்று கொள்வதால் நல்ல ஆரோக்கியமான உடல் நலமும், மன பலமும் பெற முடிகிறது. படிக்க நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது. பெண்களுக்கு தற்காப்பு கலையாக பயன்படுகிறது, ' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை