உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : ஷேர் ஆட்டோ டிவைர், மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 29; ஷேர் ஆட்டோ டிரைவர். இவர், தனது 3 வயது மகளுடன், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென மகள் மற்றும் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது அவர், 'ஷேர் ஆட்டோவை விழுப்புரத்தில் இருந்து கோலியனுார் வரை இயக்க ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்து போலீசார் வற்புறுத்துகின்றனர். இல்லையென்றால் போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர். கோலியனுார் செல்லாமல் நகருக்குள் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.இதை தொடர்ந்து, போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !