மேலும் செய்திகள்
ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது
20-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோ திருடிய வாலிபரை, ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்தவர் முகமதுயாசிர், 33; இவர், நேற்று அதிகாலை தனது ஆட்டோவை, பாகர்ஷா வீதி மசூதிக்கு அருகே நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோ திருட்டுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விழுப்புரம் சுற்றுப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் அடுத்த பனையபுரம் கூட்ரோடு அருகே மர்ம நபர், ஆட்டோவை நிறுத்திவிட்டு நம்பர் பிளேட் மாற்றிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், பாலமுருகன், ஏட்டு கலையரசன் ஆகியோர் அவரிடம் விசாரித்தபோது, விழுப்புரம் மேல் தெருவை சேர்ந்த அப்பாஸ் மகன் பஷீர், 28; என்பதும், முகமது யாசிர் ஆட்டோவை திருடிவந்து நம்பர் பிளேட் மாற்றியது தெரிந்தது.போலீசார், அவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். வாகன சோதனை மூலம் ஒரு மணி நேரத்தில், ஆட்டோ திருடனை போலீசார் கைது செய்தனர்.
20-Mar-2025