அரசு மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரியில், காவல் துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சேகர், கீதா, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் குற்றங்கள் குறித்தும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். மேலும், இந்த குற்றங்களில் இருந்து, கவனமுடன் இருப்பதற்கான வழிமுறைகள், சட்ட உதவிகள் குறித்தும், குறிப்பாக செல்போன்கள் மூலம் வரும் ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான செல்போன் செயலிகளில் வரும் கடன் திட்டங்கள், அதனால் ஏமாற்றப்படும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழுந்தைகள், பெண்களுக்கான அவசர உதவி எண் 1098, 181,1930, சைபர் குற்ற தொடர்புக்கு cybercrime.gov.inகுறித்தும் விளக்கமளித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.