விழிப்புணர்வு நிகழ்ச்சி
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரவிந்தர் வேளாண் தொழிற்நுட்ப கல்லுாரி சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் உதவி தலைமை ஆசிரியர் சாந்தவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சசிகலா, குணசேகரன் முன்னிலை வகித்தனர். வேளாண் துறை மாணவர் லோகேஷ் குழுவினர் இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, வேளாண் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆசிரியர்கள் தேவி, வில்லியம் ஆம்ஸ்ட்ராங், இந்துமதி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.