உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜெயேந்திரா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெயேந்திரா பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயேந்திரா மேல்நிலைப் பள்ளியில், போதை இல்லா தமிழகம் தலைப்பில், மாணவர்களின் மனித உருவாக்கம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளி மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து, பள்ளி மைதானத்தில் நடத்திய இந்நிகழ்வில், போதைப் பொருளுக்கு எதிராக 2,000 மாணவர்களின் மனித உருவாக்கம், அரசின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடந்தது. இந்நிகழ்வில், 2,000 மாணவர்கள் ஒன்றிணைந்து “SAY NO TO DRUGS” என்ற வாசகத்தை மனித உருவாக்கமாக அமைத்து, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான தங்களது உறுதியை வெளிப்படுத்தினர். பள்ளி தாளாளர் ஜனார்த்தனன், மகாலட்சுமி குழும இயக்குநர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ