மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்: காணை ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.காணை வட்டார வளமையம் சார்பில் நடைபெற்ற, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோதை, துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் புஷ்பராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.இதில், வட்டார ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் கவிதா, ஆசிரிய பயிற்றுனர்கள் சுபாஷ், அனிதா, ஈவாப்ரீத்தா, லட்சுமி, எழிலரசி, கோபாலகிருஷ்ணன், கெஜலட்சுமி, சிறப்பு பயிற்சியாளர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, ஏசுமரி ஆகியோர் பங்கேற்றனர். டாக்டர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.