நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தில் நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.மரக்காணம் அருகே உள்ள கட்டளை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் இணைந்து நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தலைமை ஆசிரியர் வாசுகி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயபாஸ்கரன் வரவேற்றார்.பஞ்சாயத்து செயலர் முருகன் முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் நான்காம் ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் ஜனனி, நிஷா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.