மேலும் செய்திகள்
பேரிடர் மேலாண்மை பயிற்சி
19-Sep-2025
விழுப்புரம்: மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், பட்டாசு விற்பனையாளர்களுக்கு, தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அலுவலர் பாஸ் கரன் தலைமை வகித்தார். மாவட்ட பட்டாசு உரிமையாளர்களுக்கு, விபத்தில்லாத தீபாவளி கொண்டாட்டம், பாதுகாப்பு வழிமுறைகள், தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை விளக்கி பேசினார். தொடர்ந்து, உதவி மாவட்ட அலுவலர்கள் ஜமுனாராணி, ஜெயசங்கர் ஆகியோர், தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு விற்பனை மேற்கொள்வது குறித்து விளக்கமளித்து பயிற்சியளித்தனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
19-Sep-2025