உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சர்வதேச நகரமான ஆரோவில்லில் வங்கி அதிகாரிகள் ஆலோசனை

சர்வதேச நகரமான ஆரோவில்லில் வங்கி அதிகாரிகள் ஆலோசனை

வானூர் : சர்வதேச நகரமான ஆரோவில்லில், ஐ.ஓ.பி., வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.புதுச்சேரி அடுத்த சர்வதேச நகர் ஆரோவில்லிற்கு, ஐ.ஓ.பி., வங்கியின் இயக்குநர் சஞ்சய ரஸ்தோகி கடந்த வாரம் வந்திருந்தார். மாத்ரி மந்திரை பார்வையிட்ட அவர், அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஆரோவில் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வங்கிச் சேவை பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் ஆரோவில்லில் வங்கி கிளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீதாராமனிடம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஐ.ஓ.பி., வங்கியின் முதன்மை பிராந்திய மேலாளர் ரவிசங்கர் சாஹூ, துணைப்பொது மேலாளர் எபினேசர் சோபியா, மேலாளர்கள் உமாமகேஸ்வரி, சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆரோவில் நகரில் வங்கிக் கிளை அமைப்பதற்கான இடம் குறித்து அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமனுடன் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை