உள்ளூர் செய்திகள்

பேனர் கிழிப்பு 

கோட்டக்குப்பம்; பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருந்த பேனரை கிழத்த ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பா.ஜ., மரக்காணம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர். இவர் பிரதமர் மோடியின் படம் அடங்கிய, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனை வாழ்த்தும் விதமாக இ.சி.ஆரில்., பேனர் வைத்திருந்தார். இந்த பேனரை க டந்த 31ம் தேதி மர்ம ஆசாமிகள் கிழித்து சேதப்படுத்தினர். இது குறித்து புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ