பாரதிதாசன் பிறந்த நாள் விழா; திண்டிவத்தில் கருத்தரங்கம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடந்தது.அதனையொட்டி, தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பாரதிதாசன் சிலைக்கு சங்க தலைவர் துரை ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர் குமரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து திண்டிவனம் இளமதி ஹாலில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதிதாசனின் பன்முகச் சிந்தனைகள் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்றோருக்கு எழுத்தாளர் சங்க தேசிய தலைவர் பெரியண்ணன், பொதுச்செயலாளர் ராமானுஜம் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.தமிழ்ச்சங்க செயலாளர் ஏழுமலை, ஜானகிராமன், தலைமையாசிரியர்கள் சுதர்சன், மேரி வினோதினி, வழக்கறிஞர் பூபால், ஆண்டாள் நாச்சியார் சபை பாண்டியன், விவசாயிகள் சங்க மணி உட்பட பலர் பங்கேற்றனர்.