உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் சென்றவர் கீழே விழந்து பலி

பைக்கில் சென்றவர் கீழே விழந்து பலி

அவலுார்பேட்டை; வளத்தி அருகே நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்ததில் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்றவர் கீழே விழந்து இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட், பாலமுருகன் தெருவை சேர்ந்த சத்தார் மகன் அஸ்கர் உசேன், 55; இவரது மகன் முசம்மில், 19; இவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு செஞ்சியிலிருந்து சேத்பட் நோக்கி பைக்கில் சென்றார்.பைக்கின் பின்னால் அஸ்கர் உசேன் அமர்ந்து சென்றார். அப்போது, சேத்பட் ரோடில் அருள்நாடு பகுதியில் ரோட்டின் குறுக்கே நாய் சென்றதால் முசம்மில் பிரேக் போட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி பைக் கீழே சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அஸ்கர் உசேன் அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை