மேலும் செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது
26-Jan-2025
கோட்டக்குப்பம் : விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன், 36; பா.ஜ., பிரமுகர். இவருக்கு கடந்த 5ம் தேதி இரவு மொபைல் போனில் அழைப்பு வந்துள்ளது.எதிர் முனையில் பேசிய நபர், மதியழகனின் குடும்பத்தை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.அதிர்ச்சியடைந்த மதிழயகன், மொபைல் அழைப்பை துண்டித்துள்ளார்.சிறிது நேரத்தில், கோட்டக்குப்பம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் மதியழகனிடம் மொபைல் போனில் பேசியுள்ளார்.அவர், 'நீ தனியாக வந்தால், பா.ம.க., கவுன்சிலர் சிவராமன், உன்னை கொலை செய்ய தயாராக உள்ளார்' என கூறினார்.விசாரித்ததில், முதலில் தனக்கு, பா.ம.க., கவுன்சிலர் சிவராமன்தான் போனில் தொடர்பு கொண்டு, மிரட்டல் விடுத்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்து மதிழயகன், கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கவுன்சிலர் சிவராமன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Jan-2025