உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., தேர்தல் அறிக்கை கோரிக்கை பெட்டி

பா.ஜ., தேர்தல் அறிக்கை கோரிக்கை பெட்டி

விழுப்புரம் : விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேர்தல் அறிக்கைக்கு பொது மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கி, பொது மக்களிடம், கருத்து கேட்பு, கோரிக்கை படிவங்களைப் பெற்றார்.அப்போது அவர் கூறுகையில், 'நாடு முழுவதும் லோக்சபா தொகுதிகள் வாரியாக, பிரதமர் மோடியின் உத்திரவாதம் என்ற கோரிக்கை மனு பெறும் பெட்டி வைத்து, தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.அந்த அடிப்படையில், விழுப்புரத்தில் மனு பெறும் பெட்டி வைத்து, கருத்து கேட்கப்படுகிறது. கோரிக்கைகள் பெறப்பட்டு, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.மாவட்ட பொதுச் செயலர் சதாசிவம், மாநில செயற்குழு தியாகராஜன், பொதுக்குழு சுகுமார், மாவட்ட மகளிரணி தலைவர் சரண்யா திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர்கள் குபேரன், ராஜலட்சுமி, ரேகாபாய், மண்டல தலைவர்கள் விஜயன், அருள்பிரகாஷ், இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், பட்டியல் அணி தலைவர் திருநாவுக்கரசு, ராம்குமார், வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி