உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம்: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து, திண்டிவனத்தில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், தமிழ்நாட்டிலுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவை பற்றி அவதுாரு பரப்பி வரும் பாகிஸ்தானை கண்டித்து, மத்திய நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன் சிறப்புரையாற்றினார். ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளிரகுராமன், மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் ஜின்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எத்திராஜ், பாண்டியன், திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேசபெருமாள், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாகிகள் அருள்அரசி, காளியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ