வானுார்: வானுார் தொகுதியில், மாவட்ட பா.ஜ., சார்பில் கோரிக்கை பெட்டி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.வடக்கு மாவட்டம் சார்பில், நலத்திட்டங்களின் வளர்ச்சிக்கான மனுக்கள் பெற தொகுதி வாரியாக பா.ஜ., சார்பில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தொகுதி மக்களின் தேவைகள் குறித்த கோரிக்கை பெட்டி வைக்கும் நிகழ்ச்சி வானுார் தொகுதியில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ்நிறுத்தத்தில் நடந்தது.வடக்கு   மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கோரிக்கை பெட்டியை வைத்து, பொது மக்களின் கோரிக்கைகளைப் பெற்றார். மாவட்டபொதுச் செயலாளர்கள் எத்திராஜ், ராஜன், வானுார் தொகுதி அமைப்பாளர் திருசெல்வம், லோக்சபா பொறுப்பாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழுப்புரம்
தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு,  தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கி பொது மக்களிடம், கருத்து கேட்பு, கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.மாவட்ட பொதுச் செயலாளர் சதாசிவம், மாநில செயற்குழு தியாகராஜன், பொதுக்குழு சுகுமார், மாவட்ட மகளிரணி தலைவர் சரண்யா திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர்கள் குபேரன், ராஜலட்சுமி, ரேகாபாய் உட்பட பலர் பங்கேற்றனர்.