உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுடுகாட்டிற்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

விழுப்புரம், : சுடுகாடு இடம் இல்லாததை கண்டித்து பனங்குப்பம் கிராம மக்கள் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த பனங்குப்பம், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி,68; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5.00 மணிக்கு நடந்தது. அப்போது, சடலத்தோடு, கோலியனுார் கூட்ரோடு அருகே விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5.15 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். வளவனுார் போலீசார், பேச்சுவார்தை நடத்தினர். அதில், பனங்குப்பம் புதிய காலனியில் சுடுகாடு இல்லாததால், வாய்க்கால் அருகே புதைத்து வருகிறோம். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். போலீசார், கோரிக்கையை அதிகாரிகளிடம் முறையாக கொண்டு செல்லுங்கள். நாங்களும் இந்த பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம் என கூறியதன் பேரில். 5.45 மணிக்கு மறியலை கைவிட்டு, சடலத்தை எடுத்துச் சென்றனர். இதனால், விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை