மேலும் செய்திகள்
ஆரோவில்லில் ரத்ததான முகாம்
30-Dec-2024
விழுப்புரம் : அசோகபுரி கிராமத்தில், விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.அசோகபுரி கிராமத்தில் உள்ள கே.ஜி., செவிலியர் கல்லுாரி நிறுவன தலைவர் கோவிந்தனின் 3வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, நடந்த ரத்ததான முகாமிற்கு, கல்லுாரி தாளாளர் செந்தில்குமார், சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.முகாமில், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.
30-Dec-2024