ரத்ததான முகாம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பார்மசி கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றம், சூர்யா கல்வி குழுமம் சார்பில் நடந்த முகாமை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் வரவேற்றார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயா தலைமையில் மருத்துவ குழுவினர் மாணவர்களிடமிருந்து 60 யூனிட் ரத்த தானம் பெற்றனர். சுகாதார ஆய்வாளர்கள் அருண், ஆதித்யன், ரத்த வங்கி மருத்துவ சமூக பணியாளர் அசோக்குமார், ஓம் சக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் திருநாவுக்கரசு, மன்ற நிர்வாகிகள் செல்வகுமார், பாபு, சக்தி. கல்லுாரி முதல்வர்கள் சங்கர், வெங்கடேஷ், பாலாஜி, மதன் கண்ணன், துணை முதல்வர் ஜெகன், தன்னார்வலர் சந்துரு குமார், டாக்டர் கார்த்திகா, பார்மசி கல்லுாரி பேராசிரியர்கள் மகிமை உபகார வளவன், கபிலன், சரஸ்வதி, அறிவழகன், சத்யா, உதவி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.