அரசு கல்லுாரியில் பட்டிமன்றம்
விக்கிரவாண்டி: அன்னியூர் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கான பட்டிமன்றம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு நடந்த பட்டிமன்றத்திற்கு கல்லுாரி முதல்வர் அசோகன் தலைமை தாங்கி நடுவராக இருந்தார். துறை உதவி இயக்குநர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜெயந்தி வரவேற்றார். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மொழி குடும்பத்தால் வளர்கிறதா, கல்வியால் வளர்கிறதா என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்கள் இடையே பட்டிமன்றம் விவாதம் நடந்தது. கருத்தாளர்கள் பேராசிரியர் சுவாமிநாதன், கிரிஜா, ரேவதி, ராசு, விஜயலட்சுமி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.