கிணற்றில் எலும்பு கூடாக உடல் மீட்பு
கண்டாச்சிபுரம், : கண்டாச்சிபுரம் அருகே மாயமான முதியவர் கிணற்றில் எலும்பு கூடாக உடல் மீட்கப்பட்டது.கண்டாச்சிபுரம் அடுத்த பெரிச்சானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன், 68; கடந்த மே மாதம் 14ம் தேதி மாயமானார். கடந்த 9ம் தேதி அவரது மனைவி சுமதி கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் சுமதியின் சகோதரர் சந்திரசேகர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் எலும்பு கூடு மிதப்பதாக கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்னியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து எலுக்கூடான உடலை மீட்டனர். முனியன் வீட்டை விட்டு செல்லும்போது, 8 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கிணற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுடன் கூடிய ஆடையில் ரூ. 8 ஆயிரம் பணம் கண்டெடுக்கப்பட்டது. எலும்பு கூடான உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.