உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரியில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற டி.இ.ஓ., சீதாராமன் எழுதிய, 'மயில மலை முருகன் இரட்டை மணிமாலை', செய்யூர் வட்டம் சவரம்பாக்கம் வல்லாளன் எழுதிய, 'அருள்மிகு மயிலம் சுப்ரமணிய சுவாமி பிள்ளைத்தமிழ்', செங்கல்பட்டு தமிழாசிரியர் பாண்டியன் எழுதிய, 'கலித்தொகை காட்சியும், மாட்சியும்' என்ற 3 நுால்களையும் மயிலம் ஆதீனம் வெளியிட்டார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசிய தலைவர் பெரியண்ணன் சிறப்புரை ஆற்றினார். கவிஞர்கள் முருகசாமி, திருமூர்த்தி, கமலா முருகன் நூல் மதிப்புரை வழங்கினர். உதவி பேராசிரியர் காஞ்சனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை