உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விரைவில் விழுப்புரத்தில் பூத் நிர்வாகிகள் கூட்டம் த.வெ.க., நிர்வாகிகள் இடம் தேர்வு

விரைவில் விழுப்புரத்தில் பூத் நிர்வாகிகள் கூட்டம் த.வெ.க., நிர்வாகிகள் இடம் தேர்வு

தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் தேர்தல் பணிகள் சைலெண்டாக நடந்து வருகிறது. இந்த சூழலில், த.வெ.க., தலைவர் விஜய் தனி ரூட்டில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளார்.முதற்கட்டமாக பூத் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கும் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். இந்த கூட்டத்திற்கு, வெளி மாவட்டங்களுக்கு செல்லும் த.வெ.க., தலைவர் விஜய், 'ரோடு ஷோ' நடத்தி தனக்குள்ள வாக்காளர்கள் பல்சையும் கண்காணித்து வருகிறார்.தற்போது கோவையில் நடந்துள்ள பூத் நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.விழுப்புரம் மாவட்டத்திலும் விரைவில் நடைபெற இருப்பதாக த.வெ.க., முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்காக கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யும் பணிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.த.வெ.க., கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடந்த போது, போக்குவரத்து ஸ்தம்பித்தது போல், தற்போது மாறிவிடக் கூடாது என்ற முனைப்போடும், பொதுமக்கள் பாதிக்காத வகையிலும் த.வெ.க., நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்டத்தில் பூத் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்ய துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ