உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை

தலைதுாக்குகிறது மீண்டும் சாராய விற்பனை

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவில் போதுமான போலீசார் இல்லாததால் சாராய விற்பனை மீண்டும் தலைதுாக்க துவங்கியுள்ளது.மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன், மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., தீபக்சிவாச் பிறப்பித்திருந்தார்.இந்த பணியிட மாறுதலில், முறையாக போலீசார் மாற்றப்படாமல் போலீசார் பலர் அதே போலீஸ் ஸ்டேஷன்களில் பணி புரிந்து வருகின்றனர்.சிலர், எஸ்.பி., போட்ட உத்தரவை மதிக்காமல் மாறுதலான போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லாமல் அதே போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிகின்றனர். இது மட்டுமின்றி, மதுவிலக்கு பிரிவில் மட்டும், 66 போலீசார் வேறு சரகத்திற்கு மாற்றப்பட்டனர்.ஆனால், மதுவிலக்கு பிரிவில் போதுமான போலீசார் நியமிக்கப்படாததால் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், போதுமான அளவில் ரோந்து பணியில் ஈடுபட போலீசார் இல்லாததால், விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் சாராய விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.உதாரணமாக, செஞ்சி, கோட்டக்குப்பத்தில் மதுவிலக்கு பிரிவில் இன்ஸ்பெக்டர் இல்லாததால், விழுப்புரம் இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, முற்றிலுமாக சாராய விற்பனையை ஒழிக்க முடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை