உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்

பிரம்மா குமாரிகள் நாளை சிறப்பு தியானம்

விழுப்புரம், ;வளவனுார் பிரம்மா குமாரிகள் தியான நிலையத்தில் நாளை (27ம் தேதி) இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது. தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துக்குமரன் கூறியதாவது: விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் நாளை 27ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது. முகாமில், ராஜயோக தியான பயிற்சி, வாழும் கலை, தற்கொலையிலிருந்து விடுபடுதல், நேர்மறையான எண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு தியான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வயது முதிர்ச்சியடைந்த பால பிரம்மா குமாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செல்வமுத்துக்குமரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி