உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிராமணர் சங்க நிர்வாகிகள் செஞ்சியில் பதவி ஏற்பு

பிராமணர் சங்க நிர்வாகிகள் செஞ்சியில் பதவி ஏற்பு

செஞ்சி: தமிழ்நாடு பிராமணர் சங்க விழுப்புரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செஞ்சியில் நேற்று நடந்தது.மாநில அமைப்புச் செயலாளர் குமார், மாநில ஆலோசகர் தியாகராஜன் தலைமை தாங்கினர். ராணிப்பேட்டை மாவட்ட துணை தலைவர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். மாவட்ட தலைவராக செஞ்சி குமார், மாவட்ட பொது செயலாளராக தண்டபாணி, பொருளாளராக திண்டிவனம் குமார், இளைஞரணி செயலாளராக ராமசுப்பு, மகளிரணி செயலாளராக ஜெயஸ்ரீ மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.நிர்வாகிகள் சீனுவாசன், சந்திரசேகரன், ராஜசேகரன், ராஜன், சீத்தாராமன்ராவ், ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். செஞ்சி, மணம்பூண்டி, திண்டிவனம், மரக்காணம், கண்டாச்சிபுரம், விழுப்புரம், வளவனூர் கிளைகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சுரேஷ் சர்மா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ