உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கட்டாஞ்சிமேட்டிற்கு பஸ் சேவை

கட்டாஞ்சிமேட்டிற்கு பஸ் சேவை

செஞ்சி: கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு புதிய பஸ் சேவையை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.செஞ்சி அடுத்த மேல்சேவூர் ஊராட்சி, கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு செஞ்சியில் இருந்து பஸ் வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று செஞ்சியில் இருந்து கட்டாஞ்சிமேடு கிராமத்திற்கு, புதிய பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது.ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக பணி மனை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை