தொழில் நிறுவன உத்யம் பதிவு விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.உற்பத்தி சேவை, வணிகத்தில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தனது நிறுவனத்தை நிரந்தர மாக அரசு அங்கீகாரத்தோடு udyamregistration.gov.inஇணையதளம் மூலம் கட்டணமின்றி பதியலாம். மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள், உதவியை பெற இவை செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் உத்யம் பதிவு சான்று அடையாள அட்டையாக வழங்கப்படுகிறது.இந்த உத்யம் பதிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் மாவட்ட தொழில் மையம் சார்பில், விழுப்புரத்தில் நடந்தது. பொது மேலாளர் அருள் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியங்கள், உதவிகள் பற்றி கூறினார்.மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவன சங்க தலை வர் கருணாநிதி, தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் பற்றி கூறினார்.முகாமில், உத்யம் பதிவு சான்று பெற நடைமுறைகள், இதன் மூலம் விளையும் பயன்கள் உட்பட பல சலுகைகள், தொழில் முனைவோர் பெற வேண்டிய ஒப்புதல், இசைவு, உரிமம், தரச்சான்று பெறும் முறைகள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி பற்றி விளக்கப்பட்டது.