உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்

கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்

செஞ்சி: கன்டெய்னர் லாரி கார் மீது மோதியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.செஞ்சி சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ், 37; இவர், நேற்று அதிகாலை 12.20 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து தனது ஷிப்ட் டிசையர் காரில் உறவினர்களுடன் செஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாங்கல்கரை கிராம ஏரிக்கரை அருகே வந்த போது, எதிரில் வந்த கன்டெய்னர் லாரி கார் மீது மோதியது.இதில் ராமராஜ், அவரது உறவினர்கள் காந்தாமணி, சிந்துஜா, ராணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை