உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீப்பற்றி எரிந்த கார்

தீப்பற்றி எரிந்த கார்

விழுப்புரம்; கார் மர்மமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சேந்தனுாரை சேர்ந்தவர் செல்வகணபதி, 27; கார் டிரைவர். இவர் தனது ரெனால்ட் டிரைபர் காரை, வடவாம்பலத்தில் உள்ள தனது நண்பர் மூர்த்தி என்பவரின் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் காரும், அதன் அருகில் இருந்த வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை