உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

டிரைவருக்கு மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: குடிபோதையில் தகராறு செய்து, டிரைவரை தாக்கி, மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் சுபாஷ், 31; மாசுகட்டுபாட்டு வாரியத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 31ம் தேதி, ஆழாங்கால் அருகே உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த கோலியனுார் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28; கோகுல், 25; சுலைமான், 28; அரவிந்த், 29; ஹரி, 30; ஆகியோர் சுபாஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில், சூர்யா உட்பட 5 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ