சாலை மறியல் 15 பேர் மீது வழக்கு
விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அருகே சாலாமேடு நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் இருந்த சுவர் விளம்பரம் மீது மர்ம நபர்கள் ஆயில் ஊற்றியிருந்தனர். இதனை கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் முன், நேற்று முன்தினம் மாலை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், கோலியனுார் ஒன்றிய செயலாளர் தினேஷ் உட்பட புரட்சி பாரதம் கட்சியினர் 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.