உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிலத்தகராறில் சி.சி.டி.வி., கேமராவை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த வேளியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவநாதன், 60; விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாமூர்த்தி மகன்கள் மகேஷ், 45; முரளிதரன், 30; பங்காளி கள் இவர்களது பூர்வீக குடும்ப நிலம் அந்த பகுதியில் 3 ஏக்கர் உள்ளது. நிலம் பிரிப்பது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.கடந்த 24ம் தேதி, நிலத்தை பாகம் பிரித்துக்கொள்ளலாம் என மகேஷ், முரளிதரன் ஆகியோருக்கு தேவநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தேவநாதன் நிலத்தில் மோட்டார் கொட்டகை பகுதியிலிருந்தி சி.சி.டி.வி., கேமராவை உடைத்தும், தேவநாதனை தாக்கவும் முயன்றனர்.இது குறித்த புகாரின் பேரில், மகேஷ், முரளிதரன் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை