மேலும் செய்திகள்
கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
19-Jun-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த காங்கயேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆகாஷ், 22; இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான அன்பு, 23; அஜீத், 22; ஆகியோருடன் நேற்று முன்தினம் மது அருந்தினார்.இதனைப்பார்த்த ஆகாஷின் தாய் ராணி, 45; தனது மகனை கெடுப்பதாக அன்பு, அஜீத் ஆகியோரை திட்டினார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் ராணி தாக்கினர். தடுத்த அவரது கணவர் முருகனையும் திட்டி தாக்கினர்.முருகன் கொடுத்த புகாரின் பேரில், அன்பு, அஜீத் ஆகியோர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Jun-2025