உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோஷ்டி மோதல் 9 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 9 பேர் மீது வழக்கு

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே பெண் ஊராட்சி தலைவரை தாக்கிய வழக்கில் இரு தரப்பிலும் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேல்மலையனுார் அருகே மேட்டுவைலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு, 50; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 6ம் தேதி, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் சிமெண்ட் சாலை தரமாக போடவில்லை, என குறை கூறியுள்ளார். இதில் ஊராட்சி தலைவர் எல்லம்மாள், தரப்பினருக்கும் சேட்டு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஆபாசமாக திட்டி, தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சேட்டு, விக்னேஷ், 20; சுகுமார், 20; சங்கர், 43; செல்வகுமார், 44; எல்லம்மாள், 51; அவரது கணவர் சம்பத், 57; சுரேஷ்குமார், 31; சஞ்சீவ், 40; ஆகிய 9 பேர் மீது அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ