தகராறில் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
விழுப்புரம்,: தகராறில் ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 38; ஆட்டோ டிரைவர். இவருடன், மந்தக்கரை ஆட்டோ ஸ்டேண்டில் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்த சுரேஷ், 40; என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சுரேஷ் சீருடை அணியாமலும், குடிபோதையிலும் ஆட்டோ ஓட்டி வந்ததை சிவக்குமார் கண்டித்துள்ளார். இதனால், கடந்த 6ம் தேதி தனது ஆட்டோ மூலம், சிவக்குமார் ஆட்டோவை சுரேஷ் இடித்து திட்டியுள்ளார். இதில், சிவக்குமாரின் ஆட்டோ டீசல் டேங்க் சேதமடைந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் சுரேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.