உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஞ்., தலைவரை தாக்கிய கிளார்க் மீது வழக்கு

பஞ்., தலைவரை தாக்கிய கிளார்க் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் பஞ்சாயத்து த லைவரை தாக்கிய கிளார்க் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விக்கிரவாண்டி அடுத்த வெள்ளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 37; அதே கிராம பஞ்சாயத்து தலைவர். விழுப்புரம், பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40; கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். ராமச்சந்திரன் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து இந்தாண்டு வரை பணிபுரிந்த காலத்தில், 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் 3 மாதங்களுக்கு முன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 'சஸ்பெண்ட்' முடிந்து, ராமச்சந்திரன் கல்யாணம்பூண்டி கிராம பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் சேர்ந்தார். இந்நிலையில், இவர் முன்பு பணிபுரிந்த காலத்தில் 3 மாதங்கள் சம்பள பாக்கி வராததால், கடந்த 23ம் தேதி விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியில் நடந்து சென்ற சரவணனை வழிமறித்த ராமச்சந்திரன், சம்பளம் குறித்து கேட்டு தகராறு செய்து தாக்கினார். புகாரின் பேரில், ராமச்சந்திரன் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை