உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு

விழுப்புரம்: விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நன்னாட்டாம்பாளையத்தை சேர்ந்த அரிதாஸ், 21; என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அரிதாைஸ கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ