மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
24-Aug-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தகராறு செய்து, மகளிரணி தலைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்த செந்தில்ராஜா மனைவி அஞ்சுகம், 42; த.வெ.க., நகர துணை செயலர், சாலாமேடு என்.எஸ்.கே., நகரை சேர்ந்த ரங்கன் மனைவி பிரேமா, 39; த.வெ.க., மாவட்ட மகளிரணி தலைவர். இவர்கள், தனது கட்சியினருடன், கடந்த 28ம் தேதி இரவு சாலாமேடு பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த இப்ராகிம்சுகர்ணா என்பவரது துாண்டுதலின் பேரில், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான முபாரக்,35; சுனில்,34; ஆகியோர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, முன் விரோதம் காரணமாக தகராறு செய்தனர். இதனால், அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அதனை தட்டிக்கேட்ட பிரேமாவை, இருவரும் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளனர். இது குறித்து, அஞ்சுகம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் இப்ராகிம்சுகர்ணா, முபாரக், சுனில் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Aug-2025