உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு

15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு

விழுப்புரம் : வீட்டில் 15 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வாணியர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, தக்கா தெருவை சேர்ந்த ஜாபர் அலி, 39; ஜி.ஆர்.பி., தெரு பிரபு, 40; ஜெயபிரகாஷ், 42; ஆகியோர் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்து ஜாபர் அலி உட்பட மூன்றுபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில், ஜாபர் அலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை