உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே முன் விரோதத்தில் தொழிலாளியை மது போதையில் தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப், 18; கூலி தொழிலாளி. கெங்கராம்பாளையம் டைல்ஸ் கடையில் வேலை செய்தார். நேற்று காலை குடிபோதையில் அங்கு வந்த அவரது உறவினர்கள், மதகடிப்பட்டு தியாகராஜன், 28; கதிர், 32; ஆகியோர், முன் விரோதம் காரணமாக பிரதீப்பிடம் தகராறு செய்து, தாக்கினர். காயமடைந்த பிரதீப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் தியாகராஜன், கதிர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி