கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
விழுப்புரம்; கூலி தொழிலாளியை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த வி.அகரத்தை சேர்ந்தவர் சதீஷ், 40; கூலி தொழிலாளி. இவர், கடந்த 20ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தெருக்கூத்து பார்க்க சென்றார். அப்போது, அவரது உறவினர் சங்கர், 48; என்பவர், அவரை விழாக்குழுவில் உறுப்பினராக சேர்க்கைவில்லை எனக்கூறி சதீஷிடம் தகராறு செய்து தாக்கி மிரட்டல் விடுத்தார். வளவனுார் போலீசார், சங்கர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.