உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

கல் குவாரிகளில் சி.சி.டி.வி.,: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

வானூர், ; அனைத்து கல் குவாரிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என டி.எஸ்.பி., உமாதேவி அறிவுறுத்தினார். வானூர் அடுத்த திருவரக்கரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. குவாரிகளில் நடக்கும் தொடர் விபத்துக்களை தடுக்க, டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் கல்குவாரி பாதுகாப்பு குறித்து அதன் உரிமையாளர்களுடன், ஆலோசனைக் கூட்டம் வானூர் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. வானூர் இன்ஸ்பெக்டர் சிவராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசுகையில்; அனைத்து குவாரிகளிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். குவாரிகளுக்கு உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்குவாரியில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் அளித்திருக்க வேண்டும். குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் போது பாதுகாப்பு அவசியம் என கூறினார். சப்இன்ஸ்பெக்டர்கள் தீபன்ராஜ், நாகராஜன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ