மேலும் செய்திகள்
நாயை சுட்டவர் கைது
08-Aug-2025
மயிலம்: மயிலம் அருகே டாரஸ் லாரி சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து சேதமானது.. திருவாரூர் மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பிரபு 28; லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை, அரியலுார் மாவட்டத்தில் இருந்து டாரஸ் லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு, சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி திருக்கனுாரில் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் நிரப்பிக்கொண்டு மயிலம் வழியாக சென்னைக்கு புறப்பட்டார். காலை 3:00 மணியளவில் கூட்டேரிப்பட்டு நெடுஞ்சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டீசல் டேங்க் உடைந்து லாரி தீப்பிடித்து எரிந்தது. உடன் டிரைவர், லாரியில் இருந்து குதித்து தப்பினார். தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ஜெய்சங்கர், திண்டிவனம் தீயணைப்பு அலுவலர் அருணகிரி தாஸ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். மேலும் விபத்து நடந்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களை மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து மாற்று வழியில் அனுப்பி வைத்தார். இதனால் இப்பகுதியில் 3:00 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Aug-2025