மேலும் செய்திகள்
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
14-Oct-2024
விழுப்புரம் : மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:மாணவர்களுக்கு மத்திய அரசால் கல்வி உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான 2.50 லட்சம் ஆகும். கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவிதொகை இணையதளத்தில் பதிந்து இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.இந்த திட்டத்தில் இந்தாண்டு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 8 மற்றும் பத்தாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்து இந்த கல்வி உதவிதொகை வழங்கப்படுகிறது.60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவிதொகை தளத்தில் தங்களின் மொபைல் எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆர்., நெம்பர் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்த மொபைல் எண்ணிக்கு வரும்.இந்த ஓ.டி.ஆர்., எண்ணை பயன்படுத்தி இந்தாண்டிற்கான கல்வி உதவிதொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும்.இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விபரம் அறிய Https://Scholarships.gov.inமற்றும் மத்திய அரசின் சமுகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை https://Socialjustice.gov.inஅணுகி கல்வி உதவித் தொகை பயன்களைப் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
14-Oct-2024