உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.10 கோடி பாலம் பணி தலைமை பொறியாளர் ஆய்வு

ரூ.10 கோடி பாலம் பணி தலைமை பொறியாளர் ஆய்வு

திண்டிவனம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் உயர்மட்ட பாலம் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமச்சாலை அலகு சார்பில் ரூ.10 கோடி மதிப்பில், காணிமேடு-மண்டகப்பட்டு சாலையில் ஒலக்கூர் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, தலைமை பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் தண்ணீரை விரைவாக வெளியேறும் வகையில் அணுகு சாலையில் சிறுபாலம் அமைக்கவும், மழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார். கண்காணிப்பு பொறியாளர் பரந்தாமன், கோட்ட பொறியாளர் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் பத்மநாபன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ